India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன், சப்த மாதாக்கள், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தை புதுப்பித்து பஞ்சவர்ணம் தீட்டி புதியதாக நுழைவாயில் அமைத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைக் கண்டுகளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல், வலையபட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று இணைந்து உழவாரப் பணி மேற்கொண்டனர். இதன் முதல் தொடக்கமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்க தீர்த்த களத்தில் கழிவு நீர்கள் கலந்து அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை தூர்வார உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடகாவில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. எனவே கர்நாடக நாடாளுமன்ற தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையில், அந்தியூர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளில் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நேற்று முடிந்த நிலையில், நிலை கண்காணிப்பு குழுக்கள் இன்று, கலைக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் ஒரு மாதம் தங்கி விவசாயிகளை சந்தித்து பயிர்கள், பயிர் சுழற்சி முறைகள், நீர்ப்பாசன வசதிகளை தெரிந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வெள்ளரி சாகுபடியில் பூச்சி தாக்குதல், அதில் வரும் விளக்கெண்ணெய் நோய் பற்றியும், கட்டுப்பாடு முறையை தெரிந்து கொண்டனர். நேற்று இயற்கை விவசாய விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தர்மபுரி மத்தியிலிருந்து 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஒகேனக்கல் அருவி. இது ஒரு அருவியை மட்டும் குறிக்காது. பல அருவிகளைக் குறிக்கும் ‘உகுநீர்க்கல்’ என்ற தமிழ் சொல்லே ஒகேனக்கல் என்றானது. இதன் கன்னட அர்த்தம் ‘புகையும் கல்பாறை’ ஆகும். பழங்காலத்தில் இதனைச் சுற்றியுள்ள பகுதியை தலைநீர் நாடு என்றழைத்தனர். கர்நாடகாவின் எல்லையில் இருப்பதால் கன்னட மொழி இந்த பகுதிகளில் ஆரம்பகாலத்திலிருந்து இங்கு பரவியுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்கி வருகிறது. கடனா அணை நீர் இருப்பு இன்று (ஏப்ரல் 27) 28 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர் இருப்பு 42 அடியாக சரிந்துள்ளது. கருப்பாநதி நீர் இருப்பு 40 அடியாக உள்ளது. குண்டாறு அணை 15 அடியாக குறைந்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை.
குமரி மாவட்டம் சேனவிளை பகுதியில் இரு அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி வழியாக இயங்கி வந்த 3 அரசு பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்தி, தனியார் வாகனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டி பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் கலந்து கொண்டு பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 8,366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.25 கோடி ஆகும்.
செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று பெண்கள் வேப்பிலை தோரணம் கட்டி வீதியில் தோறும் உலா சென்று கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர். ராஜபாளையம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே சிலம்பாட்ட கலைஞர்கள் மனித உடல் மீது தலைகீழாக நின்று தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.
Sorry, no posts matched your criteria.