India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுஜாதா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சுஜாதா ஆகிய இருவரும் ஏஜெண்டுகள் மூலமாக ரூ.50 லட்சத்துக்கு மேல் நிதி மோசடி செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போலீசார் பன்னீர்செல்வத்தையும் அவரது மனைவி சுஜாதாவையும் இன்று கைது செய்தனர்.
வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த ரோகிஸ்வரன் இவர் வேட்டைக்காரன்இருப்பு கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சில் உரிமம் பெற்று இணையதள சேவை வழங்கி வருகிறார். இந்த நிலையில், நாலு வேதபதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தொழில் போட்டி காரணமாக ஆப்டிகல் இணையதள ஒயரை துண்டித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரோகிஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியாத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமான மாடு இன்று (ஏப்ரல் 27) இவரது விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் கைதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வி.ஏ.ஓ.அகிலா கொடுத்த புகார்படி மாவட்ட தலைவர், உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சின்னதாராபுரம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டி நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் புடலங்காய் முட்டைக்கோஸ் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பேபி புடலங்காய் தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயி சங்கிலி தெரிவித்தார். கிலோ மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்த நிலையில் தற்போது கிலோ ரூபாய் 15க்கு வாங்கி செல்கின்றனர் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், நீலகிரி சுற்று சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சுர்ஜித் கே. சவுத்திரி நீலகிரி ஆட்சியருக்கு இன்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குன்னூர், எடப்பள்ளி, இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் விதி மீறி பொக்லைன் மூலம் பாறை உடைக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான இன்று கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகர் முழுவதும் வீதி உலா வந்து இன்று மீண்டும் கோயிலுக்குள் சென்றடைந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க கள்ளழகரை வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கணேசப்புரத்தை சேர்ந்த நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ராஜேஷ்சிங் என்பவர் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய ராஜேஷ்சிங்கை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்” என்றார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் வேல்முருகன். இவர் மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யூபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரை பல்வேறு தரப்பினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.