Tamilnadu

News March 16, 2024

தி.மலை: மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

image

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் A.A.ஆறுமுகம் இன்று (16.03.2024) வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி, உதவி தலைமை ஆசிரியர் மு. சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

கடலூரில் அரிசி விலை கிடு., கிடு உயர்வு!

image

கடலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் கடந்த மாதம் ரூ.52-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 60-க்கு விற்கப்படுகிறது.

News March 16, 2024

மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

image

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மே 5 ஆம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க, கோட்ட அளவில் ஏற்கனவே கிடைத்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்
நிர்மலாதேவி நேற்று அறிவித்துள்ளார்…

News March 16, 2024

புதுக்கோட்டை எதிா்கொள்ளும் சவால்கள்

image

மன்னராட்சிக் காலத்தில் நகரமைப்புக்குப் பெயா்போன நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஏறத்தாழ முழுமையாகப் பாழ்பட்டுப் போயிருக்கும் சூழலில்,மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பு மக்களிடம் ஏராளமான எதிா்பாா்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நகர விரிவாக்கத்துக்குப் பிறகு பெருந்தொகையுடன் சிறப்புத் திட்டம் தேவை.

News March 16, 2024

திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

image

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மண்டபங்களை வாடகைக்கு விடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சிகள் தங்குவதற்கும் அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திர எச்சரித்துள்ளார்.

News March 16, 2024

திண்டுக்கல் முதல்வரை சந்தித்த வேட்பாளர்

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

விருதுநகரில் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 16, 2024

திருச்சியில் பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

image

உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

நாமக்கல்: யோகாவில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் மாணவிகள்

image

சேலம் – பெரியார் பல்கலைக் கழக அளவிலான யோகாப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் அணிக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. யோகா வீராங்கனைகள் வீ. கார்த்திகா, வீ. கீர்த்தனா ஶ்ரீ, எம். மதுமிதா, ஏ. லீலாவதி, ஆர். கௌசல்யா மற்றும் ஆர் லாவண்யா ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

News March 16, 2024

தென்காசி: திமுக சார்பில் விளையாட்டு போட்டி

image

பாவூர்சத்திரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் தலைமையில் கஷ்டம் ஹாட் இந்தியன் அகாடமி அமைப்பின் மூலம் இன்று வட்டார அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா, குங்பூ விளையாட்டு போட்டிகள் நடந்தன.    போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் சீனித்துரை ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!