India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரத்த நாளங்கள் மிக துல்லியமாக கண்டறியும் அதீ நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்த ஒட்ட மதிப்பீடு. சி டி கண்டறிதல் இரத்த குழாய் பிரச்சனை முதுகு தண்டு பிரச்சனை போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஜிப்மர் இப்போது தொடங்கியுள்ளது. இது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை செயல்படும் என ஜிப்மர் நிர்வாகம்அறிவித்துள்ளது
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 யொட்டி 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (18.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க், வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக (18.3.2024) விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் புல எண்: 37ல், 3.18.50 பரப்பளவில் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் குடியிருப்பு அமைய உள்ளதாக அதற்கான ஆணைகளையும் விடப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள தென்னை மரம் 8 வேப்பமரம் 18 மற்றும் உள்ள மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தி.மலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக ரூ. 1 லட்சம் மேல் பரிவர்த்தனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி பிரேன் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று மாலை முருகனின் சகோதரர் மாரிமுத்து உட்பட 8 பேர் வீடு புகுந்து முருகனையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி தென்பாகம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிய இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். அப்போது விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், மாநில பேரவை துணை செயலாளர் அருள்அழகன் , மண்டல செயலாளர் வக்கீல் அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.