India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
களக்காடு புது தெருவை சேர்ந்தவர் யாபேஸ்(43) .இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது மார்ச் மாதத்தில் இருந்து வரலாறு 100 % மேல் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்கு நகர்ப்புறம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் மற்றும் சிறு வியாபாரிகள் தர்பூசணி பழங்களை அண்டை மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்காக குவித்துள்ளனர். பொதுமக்களும் வெயிலை சமாளிக்க தர்பூசணி போன்ற பழங்களை அதிகமாக வாங்கிச் செல்வதால் விலை உச்சத்தில் உள்ளது.
விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அளவிலான தேர்வு கடலூரில் நடைபெறுகிறது. இதில் மே மாதம் 10-ம் தேதி மாணவர்களுக்கும், 11-ம் தேதி மாணவிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கவிதா என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 4.8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மலைகளில் வாழும் பிற உயிரினங்களும் வெயிலின் கொடுமைக்கு ஆளாகின்றன. இதனால் சத்துவாச்சாரி மலைப்பகுதியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று (ஏப்ரல் 27) சிட்டு குருவிகள் மற்றும் பறவைகளுக்கு மரக்கிளைகளில் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை வைத்தனர்.
மணல்மேடை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரின் முதல் மகன் பாரிராஜன் தான் தாயை அடித்து கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
மதுரை யா. ஒத்தக்கடையைச் சோ்ந்த 18 வயது பூா்த்தி அடையாத சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், அவருக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிப்புக்குள்ளான குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீசார் பொது மக்களிடம் ஆன்லைன் டாஸ்க் கம்ப்ளீட் பிராடுகளில் ஈடுபட்டு வந்த நந்தகோபாலன் மற்றும் சாமிநாதன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர். அவர்களிடம் ரூ.6,72,600 பணம், சிம் கார்டு-8, ஏடிஎம் ஸ்வைப் மிஷின்-1 மொபைல்-7, செக் புக்-15, ஏடிஎம் கார்டு-19 போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.