India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்
சீர்காழி ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் விரைவு ரயில் நின்று கிளம்பியது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ரயிலின் பக்கவாட்டில் விழுந்து அடிபட்டு தலையில் படுகாயமடைந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.