India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதிகாரிகள் பணி செய்யும் வாகனத்தில் 5ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுத்துள்ள செய்தி குறிப்பு: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 7ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 8வது வகுப்பில் சேர்ந்து பயில ஜனவரி 2025 பருவத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு பயனடையலாம்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, இன்று தலைமை பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் அடுத்த துறைமங்கலத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி ஊர்காவல் படைக்கு (மார்ச்.19) அன்று ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மதுரை மாநகர் ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆள்சேர்ப்பு தேதி பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அறிவிக்கப்படும் என ஆணையர் லோகநாதன் அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 103 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்டமாக 90 துணை ராணுவ வீரர்களை கொண்ட ஒரு கம்பெனி தஞ்சைக்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 45 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியை சேர்ந்தவர் மோகன்குமார்(64). ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக டூவீலரில் கருங்கல்பாடிக்கு சென்றுவிட்டு கூத்தாடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வளைவில் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மோகன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச்.22) முதல் தொடங்கவுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்
Sorry, no posts matched your criteria.