Tamilnadu

News April 29, 2024

உறைய வைத்த இரட்டை கொலை பரபரப்பு 

image

மிட்டனமல்லியில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் சிவன் நாயர் (68), அவரது மனைவி பிரசன்னா (63) ஆகியோர் நேற்று வீடு புதுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை அவரது வீட்டிற்கு சிகிச்சை பார்ப்பது போல் வந்த நபர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்து தப்பித்தனர். தடையங்களை சேகரித்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 29, 2024

நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி

image

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மே தினத்தை முன்னிட்டு நாளை(ஏப்.30) ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. பாளையங்கோட்டை இக்னேசியஸ் பள்ளி மாணவியின் ஓராண்டு ஓவியப் படைப்புகள் “99 தமிழ் தாம்பூல பூக்கள்” எனும் தலைப்பில் கண்காட்சியில் இடம் பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மையம் செய்து வரும் நிலையில் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்.

image

கணபதி நல்லாம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 17 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக ஜெகநாதன் (30) என்பவரது சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றனா். திருச்சி சாலையில் சுங்கம் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 29, 2024

நாமக்கல்:ஆட்சியர் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., (28-04-2024) திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முறையாக பாதுகாக்கப்படுகின்றதா பாதுகாப்பு பணி சிறப்பாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்

News April 29, 2024

குமரி அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

குமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35), கொத்தனார். இவரது வீட்டின் பின்பக்கம் மின் விளக்கு எரியாததால் சரிசெய்வதற்காக, ஜன்னல் மீது ஏறியுள்ளார். அப்போது ஜன்னல் சரிந்து ராதா கிருஷ்ணன் வயிற்றுப் பகுதியில் விழுந்தது. ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளிச் சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2024

நீலகிரியில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோத்தகிரி குன்னூர் ஊட்டி கூடலூர் பகுதியில் உள்ள பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.கோடை விழாவை காண உள்ளூர் வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான வருகை தந்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு உதகையில் 126 மலர்கண்காட்சி மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

தேனி: பெண்ணை தாக்கிய கும்பல்

image

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.

News April 29, 2024

ஒரே நாளில் 26 வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News April 29, 2024

பென்னாகரம் பகுதியில் எம்எல்ஏ நேரில் ஆய்வு

image

பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகம் உள்ள கிராமங்களில் ஒரு சில கிராமங்களுக்கு நேற்று(28.4.2024), ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியாளர்களுடன் நேரில் சென்ற எம்எல்ஏ ஜி.கே.மணி போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசித்தார். அப்போது, சைக்கிளில் தண்ணீர் குடங்களுடன் வந்த பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக 6 கி.மீ. செல்ல வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

News April 29, 2024

விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

image

பாலூர் பிர்கா பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வில்லியம்பாக்கம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-28) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர். ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!