India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
விருதுநகரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு சமூக வலைதளங்கள் மூலமாக உண்மைக்கு புறமாக செய்தி வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று(மார்ச்.19) தெரிவித்துள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் முடிகண்டநல்லூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் தலைமை குடிநீர் ஏற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே குடிநீர் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மார் 21 மற்றும் மார்ச்.22 ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் நகராட்சியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இரண்டாம் நாள் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பழனிக்கு பக்தரின் வருகை குறைந்துள்ளது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.
இன்று சேலத்தில் நடைபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் உள்ள பேச்சாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் மோடி.
தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குட்டை மேடு பகுதியில் இன்று காலை தமிழக அரசு அனுமதியின்றி 58 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த அம்மாவாசை என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 58 மதுபாட்டில் மற்றும் விற்பனை செய்த தொகை ரூ. 7 ஆயிரத்து 80 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம், நகை மற்றும் அடகு வியாபாரம், வணிக வளாகம் உரிமையாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை பற்றி அனைத்து உரிமையாளர்களுக்கும் எடுத்துரைத்தார்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து உரையாற்றினார்.
Sorry, no posts matched your criteria.