Tamilnadu

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

வேலூர் மாவட்ட (ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட) நீதித்துறையில் 53 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்ட நீதித்துறையில் 33 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறையில் 39 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வரி வசூல்

image

சேலம் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை என சேலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடந்த சிறப்பு வரிவசூல் முகாமில் ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது. மேலும் சொத்து வரி செலுத்தாத நபர்கள் உடனே செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

News April 29, 2024

செங்கல்பட்டு: பெட்ரோல் குண்டு வீச்சு

image

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சி 12வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அமமுக கட்சியை சேர்ந்த முத்துப்பாண்டி (62). இவர் பஜனை கோவில் தெரு கொளப்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை ஹோட்டல் முன்பு கேட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 29, 2024

நாமக்கல்லில் 109 டிகிரி வரை வெப்பம்!

image

தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் 59 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்ட நீதித்துறையில் 118 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

திண்டுக்கல்: பேருந்துகள் ரத்து

image

பழனி பேருந்து நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. இன்று முதல்வர் வருகை காரணமாக கொடைக்கானலில் இருந்து பழனி பேருந்து நிலையத்துக்கு பேருந்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. மதிய நேரங்களில் கொடைக்கானலுக்கு செல்லும் பேருந்து ரத்து செய்யப்பட்டது. பேருந்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

News April 29, 2024

திருப்பத்தூர்: விபத்தில் பலியான போலீஸ்

image

வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் அண்ணாமலை, நேற்று இரவு நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் தனது நண்பர் சபரியுடன் சென்றார். அப்போது, நாட்றம்பள்ளி ஏழரைப்பட்டி அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த போலீஸ் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். 

error: Content is protected !!