India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனியாமூர் அருகே இன்று காலை வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்ததில் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆனந்த் என்பவருக்கு கால் குறைவு ஏற்பட்ட நிலையில் விஜய் என்பவர் இந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணத்தில் தனியார் அமைப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஏழை ஜோடிகளான சக்திவேல் – சங்கவி, தர்மன் – ரேவதி ஆகிய இரு ஜோடிகளுக்கு நேற்று(ஏப்.29) மாலை அரக்கோணம் ஜவகர் நகரில் உள்ள அருள் குழந்தைகள் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் மும்மதத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த சாரல் மழையால் பூமி நன்கு குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த சாரல் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிப்பட்டு பகுதியின் பின்புறம் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்த 10 ஏக்கர் நிலம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வரும் சூழலில், அந்த விளைநிலம் முட்செடிகள் வளர்ந்து காட்டுப் பகுதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று(ஏப்.29) மாலை முட்செடிகள் மீது படர்ந்த தீப்பொறி தொடர் காற்று வீச்சின் காரணமாக மலமலவென கடும் காட்டு தீயாக மாறி உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த அலுவலக உதவியாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சிட்டிபாபு தலைமையில் ஊழியர்கள் நேற்று (ஏப்ரல் 29) மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரனை சந்தித்து பட்டம் படித்த அலுவலக உதவியாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளவாறு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள் , வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணையை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. சஜீவனா தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன், இவர் சென்னையில் லாரி டிரைவராக உள்ளார். இவர் மனைவி விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் வீட்டில் 20ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக அவரது உறவினர் தங்கச்சாமி (28) பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினார். பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் விசாரித்து தங்கசாமியை நேற்று (ஏப்ரல் 29) கைது செய்தார்.
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மே 8ஆம் தேதி முதல் மே.22 ஆம் தேதி வரை பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.