Tamilnadu

News April 30, 2024

பாலக்கோடு: கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பணந்தோப்பு கிராமத்தில் நேற்று(ஏப்.29) ஜெய்கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கறவை மாடு தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கறவைமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

News April 30, 2024

நாமக்கல் அருகே காவல் துறை குறைதீா் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா பரிந்துரையின்படி ப.வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி தலைமையில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. ப.வேலூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து முகாமில் 15 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அதில் 13 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது.

News April 30, 2024

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் இன்று கரண்ட் கட்!

image

கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இன்று(ஏப்.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லை கங்கா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நங்கநல்லூரின் ஒரு பகுதி, தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் மின்தடை ஏற்படும். வெயில் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

News April 30, 2024

பாபநாசம்: விஷ மீண்ட மாரியம்மன் கோயில் திருவிழா

image

பாபநாசம் தாலுகா நாகலூர் கிராமத்தில் உள்ள விஷ மீண்ட மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று(ஏப்.29) வெட்டாற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், செடில் காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 30, 2024

மயிலாடுதுறை அருகே காய்கறி வார சந்தை

image

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை தோறும் வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

News April 30, 2024

கடலூர்:மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் செய்த செயல்

image

புதுச்சேரி மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த முனுசாமி தீபா இவர்களின் மகன் கணேஷ் (10) வயதுள்ள சிறுவன் வீட்டில் கோபித்துக் கொண்டு சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்தில் நின்று கொண்டிருந்தார்.மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சின்னையன் அடைத்து பேசி யார் என விசாரித்து புதுச்சேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

News April 30, 2024

விழுப்புரம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

பெரம்பலூர் அருகே தோராட்டம்!

image

பெரம்பலூர் எசனை ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் அக்னி சட்டி மற்றும் அழகு குத்துதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இன்று(30ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன் அருள் பெற்று எசனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

News April 30, 2024

ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!