Tamilnadu

News April 30, 2024

விருதுநகர்: காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்!

image

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் குடியிருப்போர் அவதி அடைந்து வருகின்றனர். பேராசிரியர் காலனிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது வேதனை அளிப்பதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 30, 2024

குரங்குகளை பிடித்த வனத்துறை

image

பாபநாசம் தாலுகா வழுத்தூர் கிராமத்தில் ஹாஜியார் தெருவில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை எடுத்து தின்று அட்டகாசம் செய்து வந்தன. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், இன்று(ஏப்.30) வழுத்தூர் கிராமத்தில் 2 கூண்டு வைத்து 20 குரங்குகளையும் பிடித்தனர்.

News April 30, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

நாமக்கல்: வெப்ப அலை தாக்கம்

image

தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மே 2ம் தேதிக்கு பின் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

தூத்துக்குடி: கலெக்டர் போட்ட ஆர்டர்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு “சிவப்பு மண்டலமாக” (Red Zone)ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து தூத்துக்குடி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

News April 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

அரியலூர்: கலெக்டர் அதிரடி ஆய்வு

image

உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் அலுவலரும் அரியலூர் ஆட்சியருமான  ஆனி மேரி ஸ்வர்னா இன்று ஆய்வு செய்தார். அப்போது துணை இராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். 

News April 30, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

ஈரோடு: ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

image

அந்தியூர் தேவர் மலைப்பகுதியை சேர்ந்தவர் சாக்சி (35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று பிரசவவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பின்னர், நடுக்கத்தில் நிறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

error: Content is protected !!