India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கள்ளக்குறிச்சியில் இன்று 108° செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது. அது மட்டுமன்றி வெப்ப அலையும் அதிகளவில் இருந்து வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஈரோடு, எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பவானி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் கவிதா வேலை செய்தபோது, அவரது சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மயக்கம் அல்லது அசெளகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இலவச ஆம்புலன்ஸ் எண் 108க்கு அழைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவசரகால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077, மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரயில் கடலூர் துறைமுகம் வரை நாளை முதல் நீடித்து இயக்கப்படுகிறது. சேலம் ஜங்ஷனில் மாலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில் ஆத்தூர் வழியாக விருத்தாச்சலத்திற்கு இரவு 9 மணிக்கும் கடலூர் துறைமுகத்திற்கு இரவு 10.25 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அதிகாலை 5 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்படும் ரயில் சேலம் ஜங்ஷனுக்கு காலை 9 மணிக்கு வரும் என அறிவித்துள்ளது.
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச tnpsc மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட பாஜகவின் தற்காலிக மாவட்ட செயலாளராக இருப்பவர் சேது சிவராமன். இவர் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், கட்சியின் நிர்வாகிகளை அவதூறாக பேசுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், தலைமை நேற்று சேது சிவராமனை பதவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும் விசாரணைக்காக ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியம் T.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்(45). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை, விராலிமலையில் உள்ள முருகன் கோவில் பாடல்பெற்ற தலமாக விளங்குகிறது. புராணக் கதையை கொண்ட இக்கோவில், 1000-2000 காலத்திற்கு முற்பட்டது. இத்தலம் குறித்து அருணகிரிநாதர் 16 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இத்தலத்தில் சரவணப் பொய்கை மர்றும் நாக தீர்த்தமும் உள்ளது. இக்கோவிலுக்கு பிள்ளையை தவிட்டுக்கு வாங்கி தோஷம் கழிக்கும் சடங்குகளும் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் எஸ்பிஎஸ் காலனி அருகே தேனியை நோக்கி கனரக வாகனம் ஒன்று சென்றது. சென்ட்ரிங் சாமான்கள் ஏற்றி சென்ற லாரியின் முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை- தி.மலை இடையே ரூ.50 கட்டணத்தில் நாளை(2.5.24) முதல் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டவுள்ளது. சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு தி.மலை சென்றடையும். தி.மலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50க்கு சென்னை வந்தடையும். குறைந்த கட்டணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.