Tamilnadu

News May 1, 2024

ராமேஸ்வரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

image

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு,
ராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை கிளை சார்பில் புத்தகக் கண்காட்சி ராமேஸ்வரம் அரசு பஸ் பணி மனை அருகே நாளை ( மே 2)
துவங்குகிறது. மே 10 வரை தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களை வாங்கும் வாசகருக்கு 10% சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.

News May 1, 2024

முத்தாலங்குறிச்சி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News May 1, 2024

எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு

image

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சைபழத்தின் வரத்து குறைவால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.60-க்கு விற்ற எலுமிச்சைப்பழம், தற்போது விளைச்சார் குறைவால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News May 1, 2024

தமிழ்நாட்டில் இங்குதான் அதிக மழை பதிவு

image

பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பாக உணவு வழங்கல்

image

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இன்று “தொழிலாளர் தினத்தை” முன்னிட்டு தேர்தல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக துறை சார்ந்த அலுவலர்களால் உணவு வழங்கப்பட்டது.

News May 1, 2024

விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி எண் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

310 பேர் நீட் தேர்வுக்கு தயார்

image

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 236 பேர் மற்றும் அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) பிரத்தியேகமாக நீட் தேர்வுக்கு பயின்ற 74 பேர் என மொத்தம் 310 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

News May 1, 2024

கலசப்பாக்கம்: சரமாரி கத்திக்குத்து

image

கலசபாக்கம் அடுத்த முத்தரசம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது சகோதரர் ரமேஷ்.  இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சுரேஷை வழிமறித்த ரமேஷ் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

News May 1, 2024

கடலூர் ஆட்சியர் வாழ்த்து தெரிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News May 1, 2024

கோவை: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!