India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கலுக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில், மே 1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சரக்கு லாரிகள் காய்கனிகளை ஏற்றுக் கொண்டு வெளியூர்களில் இருந்து வருகிறது. அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் இந்த வாகனங்களில் முறையாக தார்பாய் போட்டு கட்டாமலும் , கயிறு கொண்டு கட்டாமலும் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருக்கும் மூட்டைகள் கீழே விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாதிரி கிராமத்தை சேர்ந்த மல்லிகா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை பணம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி ஏடிசி பேருந்து திடல் அருகே ஆட் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதற்கு நீதிபதி லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பிரவினாதேவி, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் கீர்த்தி வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது . இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.