Tamilnadu

News May 2, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலில் வெளியே செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால், தற்போது மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 2, 2024

திருவள்ளூர் அருகே ஆட்சியர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று (02.05.2024 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.

News May 2, 2024

சேலத்தில் வெறிச்சோடிய சாலைகள்

image

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இன்று சேலம் கடைவீதி சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சாலையோர கடைகளில் விற்பனை சரிவர இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.

News May 2, 2024

கடை ஊழியர் மீது தாக்குதல்: கேஜிஎப் விக்கி கைது

image

வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் கே.ஜி.எஃப் என்ற பெயரில் விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பு பணிபுரிந்த ரிஸ்வான் என்ற ஊழியரை கடந்த மாதம் ஆட்களை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News May 2, 2024

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது – தந்தம் பறிமுதல்.

image

வடவள்ளி பகுதியில் யானைத்தந்தம் விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சாய்பாபா காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனியை சேர்ந்த விசாகன், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பிரிட்டோ என்பதும் தந்தத்தை விற்க முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்து தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு

image

நீட் இளங்கலை மருத்துவர் கல்விக்கான நுழைவுத் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம் மற்றும் பிற மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு நீட் இளங்கலை மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மே 5ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை 3462 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

News May 2, 2024

பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் மாயம்

image

வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பாலாற்று பகுதியில் குளிக்க சென்ற பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பைஜான் நீர்மூழ்கி மாயமானர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளைஞரை தேடி வருகின்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 2, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு

image

குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க புகார், தகவலை பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை தமிழ்நாடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வெளியிட்டது. துறையை 18005995950 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சரக டிஎஸ்பியை 8300070283, குமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498120504, சப்- இன்ஸ்பெக்டரை 9498122246, 9498133960 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

News May 2, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

அண்ணாமலையார் கோயிலில் ரஜினிகாந்த் மகள் சுவாமி தரிசனம்.

image

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை நகர அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று வியாழன் கிழமை காலையில் புகழ்பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல்துறை பாதுகாப்பு உடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!