India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட பாஜக ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரபாரிகள் கூட்டம் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி நீடாமங்கலம் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே மேலவிட்டுகட்டியை சேர்ந்தவர் லிட்டல்பாய் (65). இவர் நேற்று முன்தினம் சந்தைப்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் மகிளிபட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவர் டிவிஎஸ் XL வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்து மோதியதில் லிட்டில்பாய் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர்.
விருதுநகர் அருகே ஓ. முத்தலாபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டித்துரை என்பவரின் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீஸார் பாண்டிதுரையை கைது செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை ‘க்யூட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதேபோல ‘க்யூட்’ தோ்வு இல்லாமல், முதுநிலை பட்டயம், பி.வொக்., டி.வொக்., சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மே.31 வரை விண்ணப்பிக்கலாம்.
செய்யார் அருகே செய்யாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அனக்காவூர் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செய்யாறு பாராசூர் பகுதியில் சென்ற போது கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து செய்யார் அரசு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபினேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவ்விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின் விநியோக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஊரணி ஒத்த வீடு, வாழைக்காய் சந்தை ,காதர் மீரா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நாளை(மே.4) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலங்குடியில் இருந்து கல்லாலங்குடி முத்து மாரியம்மன் கோவில் வழியாக நேற்று சரக்குவேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்கு சென்று குளித்ததில் தர்மபுரி விஜய்சாரதி (19), உடுமலைப்பேட்டை தீபக்சாரதி (20), மன்னார்குடி முகமது இஸ்மாயில் (19) ஆகிய 3 பேர் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் நேற்று மாலை சடலமாக மீட்கபட்டனர்.
Sorry, no posts matched your criteria.