India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் இன்று நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவர் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றது.
திருநெல்வேலியை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இன்று (மே 4) காலை அவரது சொந்த ஊரில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கேள்விப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தான் உடனடியாக நெல்லைக்கு செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் கீழப்பாலம் வரை 1200 மீ தூரத்திற்கு சுமார் 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏழு மீட்டர் அகலமுள்ள சாலை 10 மீட்டர் அகலமாக மாற்றபடுவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பகுதியில், 4 வயது சிறுமியிடம் விருவீடு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் மகன் நாகராஜன் (55) இவர் தனது வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
வணிகர் தினம் நாளை (மே 5) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், திருநெல்வேலி டவுன் போஸ் மார்க்கெட் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை முழுவதும் கடைகள் இயங்காது என இன்று கடைகள் முன் வியாபாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் வைத்துள்ளனர்.
வாலாஜா தாலுகா சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(58) கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக இன்று (மே 4) காலை மீட்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது உயிரிழப்பு குறித்து மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுவதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நாகூர் கடைத்தெருவில் ஜமால் முகமது என்பவர் ஹார்டுவேர் கடையும் இவரது கடைக்கு அருகே அப்துல்காதர் புத்தக கடையும் சேக்தாவூத் பேன்சி கடையும் வைத்துள்ளனர் நேற்று மதியம் மூன்று கடை உரிமையாளர்களும் தொழுகைக்கு சென்று பின் திரும்பி வந்தபோது மூன்று கடைகளின் கல்லா பெட்டிகள் உடைக்கப்பட்டு மொத்தமாக ரூ.18000 திருட்டு போய் உள்ளது. புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி, வீரபாண்டியில் அமைந்துள்ளது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌமாரியம்மன் கோயில். முக்கியமாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்காக இங்கு பலரும் வழிபாடு செய்து வழக்கமாக இருந்து வருகிறது. சித்திரை, வைகாசியில் தேனியின் முக்கிய திருவிழாவாக இந்த கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் போது 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
Sorry, no posts matched your criteria.