Tamilnadu

News May 4, 2024

இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

image

தேனி பள்ளபட்டியை சோ்ந்த ராஜபிரபு (29) என்பவர் மூலம் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் மதுரையை சேர்ந்த இராணுவ வீரரான குறலரசன் என்பவர் ரூ.6 லட்சம் பங்கு முதலீடு செய்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜபிரபுவை, குறலரசன் உள்ளிட்ட 4 போ் வழிமறித்து வேனில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் குறலரசன் உள்ளிட்ட 4 பேரை நேற்று (மே 3) கைது செய்தனர்.

News May 4, 2024

திருவாரூர்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகள் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் தட்பவெட்ப நிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் துவங்கி. இன்று கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் அதிகப்படியான வெப்பம் 120 டிகிரிக்கு மேலாக அடித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News May 4, 2024

காங்கிரஸ் நிர்வாகி சடலம்: Ex அமைச்சர் கண்டனம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

ராணுவ வீரருக்கு ஆளுநர் அஞ்சலி

image

புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்று  அறிக்கையில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தனது உயிரை இழந்த ராணுவ வீரருக்கு எனது சார்பாகவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும், வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்துகிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 4, 2024

குன்னூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை

image

குன்னூர் நகரத்திற்கு கோடை கால சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க  ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயன்படுத்துகின்றனர். வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை வணிகர் தினத்தை விடுமுறை இன்றி கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம் தெரிவித்தார்.

News May 4, 2024

காங். தலைவர் வழக்கு: விசாரணையில் வெளியான தகவல்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதை தொடர்ந்து உவரி அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று (மே 4) சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

News May 4, 2024

மாநகரில் தண்ணீர் தட்டுபாடு, ஆணையரிடம் மனு

image

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, நீக்கி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகர ஆணையரிடம் மனு அளித்தனர்.

News May 4, 2024

ரேசன் அரிசி கடத்தலுக்கு புகார் செய்யலாம்

image

நாகை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். 94982 11989 என்ற எண்ணிற்கும் புகார் தரலாம் என நாகை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

News May 4, 2024

சிசிடிவி கேமராக்கள் மூலம் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை CCVT கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இருந்தார்.

News May 4, 2024

சிவகங்கையின் ஆயிரம் ஜன்னல் வீடு அம்சங்கங்கள்!

image

சிவகங்கையில் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளில் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க நகரமாக அறிவிக்கட்ட காரைக்குடி பகுதிக்கு உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டபட்டுள்ளது. இந்த வீடு 20,000 சதுர அடியில், 25 பெரிய அறை, 5 கூடங்களுடன் அமைந்துள்ளது. 1000 சன்னல் கதவுகளுடன் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசல் கதவின் சாவி கிட்டத்தட்ட 1 அடி நீளமுள்ளது.

error: Content is protected !!