India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலருமான வளர்மதி, காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் இணைந்து இன்று பார்வையிட்டு அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் மே.13 முதல் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் புறப்படும் நேரம், பயணம் கட்டணம் குறித்து எடுத்துரைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்திய வர்த்தகத் தொழிற் குழுமத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கப்பலை இயக்க உள்ள தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து 1.5 மீட்டருக்கு கடல் அலை வீசக்கூடும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த குறவர் இன மக்களின் வீட்டை ஜேசிபி மற்றும் அடியார்களுடன் சென்று இடித்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளர் காந்தா என்பவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஊராட்சி தலைவர் குயின்மேரி முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் உதவி மின்பொறியாளர் தலைமை வகித்தார். வர்த்தகர் சங்கம், பொதுமக்கள் அறிவித்த மே 7 கடையடைப்பு போராட்டத்தை 1 மாதம் தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
வர்த்தகர் சங்க நிர்வாகிகள் நிஜாமுதீன், வல்லப கணேசன், மைதீன், ஊர் நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர், திங்களூர் ,கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் இந்த மின்தடையால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து துண்டிக்கப்பட்ட மின்கம்பியை விரைந்து சீர்செய்து மின்சாரம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேவாரம் திருவாசகம் சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனக சபையில் சலசலப்பு ஏற்பட்டது. நடராஜர் கோவிலில் கனக சபை மீது தமிழ் தேவார பாடசாலை நிறுவனர் சேலம் சத்யபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். அப்போது இடையூறு ஏற்படுத்தியதாக தீட்சதர்கள் சார்பில குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
ஓஎம்ஆர் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். நேற்று பட்டினப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இவரை 4 பேர் சரமாரி தாக்கினர். இதில் ஈடுபட்ட 3 பேரை பட்டினபாக்கம் போலீசார் கைது செய்த நிலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத் தாக்குதலில் ஈடுபடாத காரணத்தினால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகியும், மாமல்லபுரம் பேரூராட்சி 2 வது வார்டு கவுன்சிலருமான த.சீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கவின். இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ்.போஹன்கர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிதி ஏற்கெனவே ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை அதிதி இன்று ‘ஸ்டார் ‘ பட ப்ரோமோஷனுக்காக மதுரை வந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.