Tamilnadu

News May 5, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழை…!

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மாலை 6.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமானக் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

தேனி: வீரபாண்டி கோயிலில் பலத்த காற்று

image

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் சித்திரை திருவிழா வரும் 7ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.  வீரபாண்டி முல்லை ஆற்றங்கரை ஓரத்தில் பழம் மற்றும் பூக் கடைகள் தகர கொட்டகை அமைத்து நடத்தி வருகின்றனர். இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தென்னை மரம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்ததில் தகர கடைகள் நொறுங்கியது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

News May 5, 2024

திருச்சியில் சுட்டரிக்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் 42.1 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News May 5, 2024

தென்காசியில் வெளுக்கும் மழை

image

தமிழகத்தில் மே 7, 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 8-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 5, 2024

நாமக்கல்லில் சுட்டரிக்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 40.5 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News May 5, 2024

நீலகிரி: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

image

நீலகிரி மாவட்டத்தில் ‘தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2024’ குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்று கூறுகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு, +2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை https://WWW. dge.tn.nic.in/ இணைய தளத்தில் இருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

News May 5, 2024

கடலூர்: சிறுமி பலாத்காரம்

image

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் நேற்று அதே பகுதியை சேர்ந்த 15 வயது உடைய மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளாள். இது குறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 5, 2024

திருவாரூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை  12ஆம் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியுள்ள +2 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை https//www.dge.tn.nic.in/ ல் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

நாங்குநேரி அருகே விபத்து: இருவர் பலி

image

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தில் இன்று காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைய நயினார் குளத்தை சார்ந்த ரத்தினசாமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 5, 2024

குரோம்பேட்டை: ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

image

குரோம்பேட்டை சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகநாதன் (38). இவர் நேற்று முன்தினம் எம்ஐடி மேம்பாலத்தின் கீழ் செல்லும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ், தண்டவாள சுற்றுச்சுவரை ஒட்டி டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!