India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரிக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்தலில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு ஆகிய கல்வி மாவட்டங்களில் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 649 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர். அதனை தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று கோடை வெயிலை ஒட்டி பொதுமக்கள் பக்தர்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு தருமபுரம் ஆதீனம் பங்கேற்று திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ள மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை அரசு அருங்காட்சியகமும், ஸ்டார் கோச்சிங் சென்டரும் இணைந்து மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ‘மாபெரும் கோடை கொண்டாட்டம்’ 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், நடனம், சிலம்பம், யோகா போன்ற போட்டி நடைபெற்றன. இதன் பரிசளிப்பு விழா நேற்று(மே 5) இரவு நடந்தது. காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.
கிருண்கிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ஓசஹள்ளி, அஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த தம்பதி கனப்பள்ளி-கவிதா. இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடி, மின்னல் தாக்கி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேற்று(மே 5) நேரில் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி கன்னிமார் கோயில் அருகில் வெயிலின் தாக்கத்தால் புல், பூண்டு எரிவதாக நேற்று(மே 5) அந்த பகுதியில் உள்ள மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் குமரன் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான புனித கத்தரீனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 3-ந் தேதி மாலை கோவை மறை மாவட்ட அருட்தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.