Tamilnadu

News May 6, 2024

ராமநாதபுரத்தில் 94.89% பேர் தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம் 72 பள்ளிகளில் 6302 மாணவர்கள், 7247 மாணவியர் என மொத்தம் 13549 பேர் தேர்வு எழுதினர். இதில் 5850 மாணவர்கள், 7007 மாணவியர் உள்பட மொத்தம் 12857 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவியர் 96.69 சதவீதம்‌ என 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் 97.45 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 96.58 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.18% தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்தது.

News May 6, 2024

+2 RESULT: காஞ்சிபுரத்தில் 92.28% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 89.08% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.56 % இதில் புதுக்கோட்டையில் பயின்ற மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

News May 6, 2024

திருப்பத்தூரில் 92.34 % பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 92.34 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.82 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 94.60% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

+2 RESULT: சென்னையில் 94.48% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 94.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.20% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம் என கல்வித்துறை சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

தென்காசி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தென்காசி மாவட்டத்தில் 96.07தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.25 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.52 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கடலூர் மாவட்டத்தில் 94.36 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.32 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 96.29 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

12ம் வகுப்பு தேர்வில் 92.53 % பேர் தேர்ச்சி

image

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6) வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 13535 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12524 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.53 சதவீதமாக உள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் 5393 பேரும், மாணவிகள் 7131 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!