Tamilnadu

News March 21, 2024

பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.

News March 21, 2024

குளித்தலை சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது.இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். கடந்த தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குளித்தலை, பெரம்பலூர் தொகுதியாகும்.

News March 21, 2024

வேலூரில் தேர் திருவிழா பிரம்மாண்டம்

image

வேலூர் மாவட்டம்,காட்பாடி காங்கேயநல்லூர் அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.இதில் 700க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 21, 2024

பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.

News March 21, 2024

தஞ்சாவூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

News March 21, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்களிடம் ரூ.12.15 லட்சம் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலைக்குழு கீழக்கரை தனி வட்டாட்சியர் ராமமூர்த்தி, சிறப்பு எஸ்ஐ வேல்முருகன் உள்ளிட்டோர் உச்சிப்புளி பருந்து விமான தளம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்கள் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.12.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகையை வருமான வரி துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

News March 21, 2024

நாமக்கல்: வீடியோ ரிலீஸ் செய்த ஆட்சியர்

image

2024 மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வேண்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் 2024 தேர்தல் தொடர்புடைய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

News March 21, 2024

சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோழவந்தான், உசிலம்பட்டி ஆகியவை தேனி மக்களவைத் தொகுதி.

error: Content is protected !!