Tamilnadu

News May 6, 2024

மறு மதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தொடக்க பள்ளிக்கல்வி இயக்குநர் சேதுராம வர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ” மாணவர்கள் தங்களை மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (மே7) ஆன்லைன் மூலமாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.

News May 6, 2024

பெரம்பலூர் : மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் k.கமலி மற்றும் செனிதா என்ற இரண்டு மாணவிகளும் 593/600 முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியம் இனிப்பு வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

News May 6, 2024

அரசு பள்ளி 8 ஆண்டுகளாக சாதனை

image

வானூர் தாலூகா கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி சபிதா 537 மதிப்பெண்ணும், ஜனனி 520, ஷாலினி 510 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளி வானூர் வட்டார பகுதியில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்த பள்ளிக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

News May 6, 2024

ஆவடி அருகே கத்தி குத்து: ஒருவர் கைது

image

ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யராஜ் (36). இவரது மனைவி சுகன்யா (33). இந்த நிலையில் நேற்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கத்தியால் சுகன்யாவின் கழுத்தில் சத்யராஜ் சரமாரியாக குத்தியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை இன்று கைது செய்தனர்.

News May 6, 2024

சென்னையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

image

சென்னை வானகரம் அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

News May 6, 2024

தி.மலை: மனம் உருகிய இசைஞானி இளையராஜா 

image

இசைஞானி இளையராஜா தான் இயற்றிய அற்புதம் அற்புதம் அற்புதமே என்ற பகவான் ரமண மகரிஷியின் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார். இன்று நடைபெற்ற ரமணரின் 74-வது ஆராதனை விழாவில் ஆசிரம நிர்வாகிகள் டாக்டர் ரமணன் சிவதாஸ் கிருஷ்ணன், இசைஞானி இளையராஜா, தெலுங்கு திரை நட்சத்திரங்கள் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

News May 6, 2024

தூத்துக்குடி: மனைவி வெட்டி கொலை

image

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி. ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நாகேந்திரன் இன்று காலை அவரை அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த ரெஜினா மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த நாகேந்திரன் முத்தையாபுரம் போலீசில் சரணடைந்தார்.

News May 6, 2024

அரியலூர் மாவட்டம் 3வது இடம்

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 97.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, அரியலூர் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. மேலும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

News May 6, 2024

கடலூர்: பிளஸ் 2 பொது தேர்வில் மாணவி முதலிடம்

image

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஜி.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.பிரணவி 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த பி. ஸ்ரீ கோதைநாயகி, அபினவ் தென்றல் மற்றும் வினோதினி ஆகியோர் 591 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தனர்.அவர்களுக்கு பள்ளி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

News May 6, 2024

திருச்சியில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு

image

திருச்சி மாவட்டத்தில் 13371 மாணவர்களும், 16244 மாணவிகளும் மொத்தம் 29615 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். இதில் 12491 மாணவர்களும் 15863 மாணவிகளும் என மொத்தம் 28354 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.74 ஆகும். கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது. எனவே இது கடந்த ஆண்டை விட குறைவான தேர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!