India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அய்யம்பேட்டையில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அய்யம்பேட்டை பாபநாசம் காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அய்யம்பேட்டையில் தொடங்கி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றி கணக்கெடுப்பு ஐபிஎஸ்ஒஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் கணக்கெடுப்பில் தவறாது கலந்துக்கொண்டு தங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.
தருமபுரி மக்களவை தொகுதியில் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி பாமக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கம் சற்றுமுன் மாற்றப்பட்டார். பாஜக என்டிஏ கூட்டணியில் பாமக மாநிலம் முழுவதும் 10 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சிலர் ஒன்றிணைந்து விசைப்படகுகள் மூலம் கடந்த 20-ம் தேதி இரவு கடலுக்கு சென்று கேராளா, குளச்சல் படகு வருகின்றதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கேரளா விசைப்படகு மற்றும் 5-குளச்சல் விசைப்படகு என மொத்தம் 6-படகுகளை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிட உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் தேவதாஸ் போட்டியிடுவார் என பாமக தலைமை அறிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களாக வேட்பு மனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட கடந்த இரண்டு நாட்களாக எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் 3-வது நாளான இன்றும் (மார்.21) ஒருவரும் வேட்பு மனு தாக்கல் மேற்கொள்ளவில்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலக பிரிவில் மக்களவைத் தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி பணியாளர்களை கணினி மூலம் பிரித்தெடுத்தலுக்கான (Randomization) முதல்கட்ட நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்lலக்கரையில் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் கலந்து கொள்ள உள்ள இடத்தில் எம்பி கனிமொழி இன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (24.03.24) இரவு 10 மணிக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை (25.03.16) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமியின் இடது பாதமும், அம்பிகையின் வலது பாதமும் தரிசனம் செய்யலாம். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பாத தரிசனம் காண அனைவரும் வருகைதர கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட மூன்று அவதூறு வழக்குகள் விழுப்புரம் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டாா்.
Sorry, no posts matched your criteria.