India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி திமுக சார்பில் அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் கிரேப் ஜூஸ் வழங்கப்பட்டது. இதில், ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளர் S.S.அன்பழகன், நகரச் செயலாளர் AC.மணி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெண் போலீஸாரை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு விசாரணையை வரும் மே.14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன மோட்டூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் நாட்டறம்பள்ளி தாசில்தார் சம்பத் வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஜி.ஆனந்தன், கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த இளையராஜா காமாட்சி தம்பதி மகன் சூர்யா (9). இவர் கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வரக்கூடிய தனியார் பேருந்து ஏறியுள்ளார். யாரும் இல்லாமல் தனியாக வந்த சிறுவனை நடத்துனர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பட்டீஸ்வரம் போலீசார் அளித்த தகவலின் படி சூர்யா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து நோயாளிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.