Tamilnadu

News May 20, 2024

கொட்டும் மழையில் அமைச்சர் கீதாஜீவன்

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்ட நிலையில் மழையில் அமைச்சர் கீதாஜீவன் 5வது வார்டுக்குட்பட்ட இந்திராநகர் பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அப்பணியில் முழுமையாக அமைச்சர், அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News May 20, 2024

ராமநாதபுரம் பாம்பன் பாலம் சிறப்பு!

image

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.

News May 20, 2024

வேலை வாய்ப்பு பெருகும்: விஞ்ஞானி சிவன்

image

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகவும் தேவையானது. இதனால் தொழிற்சாலைகள் அதிகமாக வரும். அப்படி அதிக அளவிலான தொழிற் சாலைகள் வந்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும். அந்த பகுதியே வளர்ச்சி அடையும். இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ககன்யான் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர், முதலில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

News May 20, 2024

ஆம்பூர்: தேனி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

image

ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.  நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தார் மாமலை காட்டில் தேனீ எடுக்க சென்றார். அப்போது தேனி கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை நண்பர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

News May 20, 2024

மதுரையில் அஞ்சல்தலை கண்காட்சி!

image

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் இன்று அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது. தபால் தலை நிபுணர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால முதல் தற்போது வரை உள்ள ஆயிரக்கணக்கான வகையிலான அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

News May 20, 2024

ஜமாத் தலைவருக்கு எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்

image

நெல்லை மாநகர டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீத் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று (மே 20) இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவரை இழந்து வாடும் ஜமாத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News May 20, 2024

கொடைக்கானல்: காா் கவிழ்ந்து இளைஞா் பலி

image

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலை நண்டாங்கரைப் பகுதியில் சென்ற போது காா் கட்டுப்பாட்டை இழந்து 200-அடிப்பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவசர ஊா்தியில் 4 பேரையும் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பைஜூா் ரகுமானை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

News May 20, 2024

புதுவையில் தொடரும் இணையவழி மோசடி

image

புதுச்சேரி திலாசுப் பேட்டை ஹிமான்ஷு மீனாவிடம் ரூ‌.1.22 லட்சம், புதுச்சேரி மங்கலம் விஜயஸ்ரீயிடம் ரூ.5,000 ரெட்டியாா்பாளையம் ராம்குமாரிடம் ரூ 13,200, புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிலம்பரசனிடம் ரூ 6,670, இலாசுப்பேட்டை வெற்றி வேலிடம் ரூ 3,750 பெற்று நூதனமுறையில் ஏமாற்றி ரூ.1.51 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News May 20, 2024

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடி,156 உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.86 அடி,118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.40 அடி காணப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது.

News May 20, 2024

திருப்பூரில் 364.50 மிமி மழை பதிவு

image

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரின் ஏராளமான பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்கு பகுதியில் 60 மில்லிமீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 38 மில்லி மீட்டர் மழையும், காங்கேயத்தில் 23 மில்லிமீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!