India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று(ஆக.22) நடந்தது. இதில், 21 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில், 164 பேர் கலந்து கொண்டதில், 37 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 13 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, முழு உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து, உடல் ஆரோக்கியம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் 2 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என அரசு கல்வித்துறை அதிகாரிகள் போல் பேசி, வீடியோ கால் மூலம் QR ஸ்கேன் செய்ய வற்புறுத்தி பல லட்சம் ரூபாய் ஆன்லைனில் பறித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெற்றோர் சைபர் கிரைமில் புகார் அளித்து உள்ளனர்.இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.