India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் இன்று 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனை அடுத்து அமைச்சர் அவர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.
கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும் 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலமாக காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (மே 23) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று(22.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 30 மி.மீ, புலிவலம் 12 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 15 மி.மீ, லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 80.4 மி.மீ, லால்குடி 8.4 மி.மீ, நாத்தியார் ஹெட் 15.6 மி.மீ, புள்ளம்பாடி 77.8 மி.மீ என மாவட்டத்தில் மொத்தமாக 326.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டுவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (34), ஆட்டோ டிரைவர். இவர் வழக்கம்போல் நேற்று ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அவரது மனைவி விவசாய வேலைக்காக வீட்டை பூட்டி சாவியை படியில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் 3 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமில் வைத்திருந்த ஆறரை சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கம்மநாயக்கனூர் புதூருக்கு விடுமுறைக்கு கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற தொழிற்பயிற்சி கல்லூரி மாணவன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் பரிதாபமாக குட்டைக்குள் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி அருகே மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்த செல்லும் சிறுமிகளுக்கு பைக்கில் வரும் மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர்.
குன்னூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று (மே 23) மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட இருந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும். இந்த தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் (24). இவர் கடந்த 21ஆம் தேதி வேலூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடிக்கு வந்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட நேரத்தில் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினார். இதில் நிலைதடுமாறிய அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, தனுஷ்கோடி சுற்றுலாத் தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கடலின் அழகை ரசித்துச் செல்வர். இந்நிலையில் நள்ளிரவு முதல் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.