Tamilnadu

News March 23, 2024

பழனி: 20 டன் வாழைப்பழம்

image

பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை வாங்குகின்றனர். ஆடலூர், பன்றி மலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் மலை வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பழம் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

News March 23, 2024

தென்காசி அருகே வெடி விபத்து

image

தென்காசி,மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.ஆலைக்கு அருகே அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் பேரின் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

News March 23, 2024

கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை

image

கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை; கூட்டணி இல்லையென்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க. முக்கிய காரணம்’ என்று சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டியளித்தார். உடன் முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 23, 2024

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் பலியான சோகம்

image

வாணியம்பாடி ஆம்பூர்பேட்டை சேர்ந்தவர் நிஷாந்த் (20) இவர் காட்பாடியில் வேலை செய்து விட்டு இன்று இரவு தனது வீட்டிற்கு செல்ல வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.  வாணியம்பாடி ரயில் நிலையம் கடந்து மெதுவாக சென்ற போது ஓடும் ரயிலில் இறங்க முயன்றார். அப்போது தவறி விழந்து அதே ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

News March 23, 2024

தூத்துக்குடி: மார்ச் 24ல் பிரச்சாரம் ஆரம்பம்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். நாளை (மார்ச் 24) தனது முதல் பிரச்சாரத்தை  கனிமொழி எம்பி தொடங்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், கலைஞர் அரங்கத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து  பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அவர் தெரிவித்தார். 

News March 23, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு கருத்தரங்கம்

image

மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 23, 2024

கடலூர் புனித வளனார் கல்லூரியில் ஆண்டு விழா

image

கடலூர் புனித வளனார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது இந்த ஆண்டு விழாவிற்கு அருட்தந்தை முனைவர் சேவியர் அருள்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஆண்டு விழாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News March 23, 2024

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

image

நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சுப்புலட்சுமி இன்று  (மார்ச் 23) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

திமுக வேட்பாளருக்கு திருகுர்ஆன் வழங்கிய பொறுப்பாளர்கள்

image

தேனியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் தலைமையில் இன்று அனைத்து கட்சி மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு திருக்குர் ஆன் அன்பளிப்பாக வழங்கினர். இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 23, 2024

உதகை நகர பாஜக தேர்தல் பணி குழு கூட்டம்

image

உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உதகை  சட்டமன்ற தொகுதி பாஜக வாக்கு சாவடி குழு மற்றும் தேர்தல் பணி குழு கூட்டம் இன்று (23 தேதி ) நடைபெற்றது. உதகை நகர பாஜக  தலைவர் சி பிரவீன்  தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், அருண், உதகை நகர பொது செயலாளர்கள் சுரேஷ்குமார், ரித்து கார்த்திக், துணை தலைவர் ஹரி கிருஷ்ணன்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!