Tamilnadu

News March 23, 2024

ஸ்டாலினை பார்த்ததுமே.. பூரித்த தஞ்சாவூர்!

image

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

News March 23, 2024

நாமக்கல் அருகே 29 கிலோ தங்கம்

image

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்தது போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 23, 2024

திண்டுக்கல்: போஸ்டரால் பரபரப்பு

image

குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தேர்தலை புறக்கணிப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.

News March 23, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 நபர்களை கைது செய்யப்பட்டும், 3,663 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.2,34,552/- என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

மதுரை டூ போடி வரை மின்சார ரயில்

image

மதுரை – போடி வரை சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று (மார்ச் 23) ரயில்வே அதிகாரிகள் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை இருப்புப் பாதைகளை ஆய்வு செய்தனர். விரைவில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தனர்.

News March 23, 2024

விருதுநகரில் ஆட்சியர் தகவல் 

image

விருதுநகர், தேர்தலை முன்னிட்டு அச்சடிக்கப்படும் போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.விதியை மீறினால் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127ன் கீழ் 6 மாதம், இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 23, 2024

திருச்சியில் ஆட்சியர் தகவல்.!

image

மக்களவை பொது தேர்தலில் மூத்த குடிமக்கள் பார்வை, இயக்க குறைபாடு கொண்டவர்கள்,வாக்களிக்கும் நாளில் பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.போக்குவரத்து வசதி இல்லை என்றால்,அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும்,இறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தகுதி உள்ள வாக்காளர்கள் இசிஐ ஆப்-ஐ பயன்படுத்த திருச்சி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாபு போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுக தலைமை கழகம் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கழக அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, காந்தி மாவட்ட செயலாளர்கள் பவுன்ராஜ், பாரதிமோகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 23, 2024

அழகு குத்தி கிரிவலம் வந்த பக்தர்கள்

image

பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் முகத்தில் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட சென்றனர். 5 அடி முதல் 10 அடி வரையிலான வேலை முகத்தில் குத்தி கிரிவலம் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி முருகனை தரிசனம் செய்தனர்.

News March 23, 2024

போளூர்: மலை கோயிலில் சிறப்பு பூஜை

image

போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சம்பத்கிரி மலையில் உள்ள சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை லட்சுமி நரசிம்மர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 940 படிக்கட்டுகளை ஏறி கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.

error: Content is protected !!