Tamilnadu

News May 27, 2024

திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் 30-ஆம் தேதி நடக்கிறது

image

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 30-ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் இன்று தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News May 27, 2024

மயிலாடுதுறையில் ஆஹா கொண்டாட்டம்

image

மயிலாடுதுறையில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் மயிலாடுதுறை சிநேகிதிகளின் ஆஹா கொண்டாட்டம் என்ற நிகழ்வு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

News May 27, 2024

பைக் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பொன்னாக்குடி பாலத்தின் மீது நெல்லையில் இருந்து இன்று (மே 27) நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஸ்வரன் (22) ஆகிய இருவரும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 27, 2024

உதகை மலர் கண்காட்சி 2.50 இலட்சம் பேர் பார்வை

image

நீலகிரி மாவட்டம் உதகை சீசனை முன்னிட்டு  அரசு தாவரவியல் பூங்காவில்  நடைபெற்ற 16 நாள் மலர் கண் காட்சியை  2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 13  நாள் ரோஜா கண்காட்சியை  1.10 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 3 நாள் பழக்கண்காட்சியை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இந்த விழாக்களுடன் நீலகிரி கோடை விழா முடிவடைந்தது.

News May 27, 2024

மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய முக்கியப் புள்ளி

image

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வீரசக்தி, கமலக்கண்ணன் உள்பட 20க்கும் மேற்பட்டோரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர் கம்பம் தனுஷை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்து(மே 26) மதுரை அழைத்து வந்தனர்.

News May 27, 2024

தேவகோட்டை அருகே விபத்தில் இருவர் பலி!

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எழுவங்கோட்டை செல்லும் சாலையை கடக்க முயன்ற பனந்தோப்பு சபரிமுத்து என்பவர் மீது வாகன மோதி உயிரிழந்தார். அதேபோல் நல்லாங்குடி விளக்கு அருகே மாவிடுத்திகோட்டையை சேர்ந்த குப்புசாமி என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானார். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 27, 2024

அரசியல் கட்சியினருக்கு சம்மன் அனுப்ப முடிவு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.

News May 27, 2024

கரூர்: பாலத்தில் இருந்து குதித்த திருடர்களுக்கு கால் முறிவு

image

கரூர் நகர போலீசார் கோதை நகரில் நேற்று(மே 26) ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி, மோத்தீஸ் என்பதும், இருவரும் முதியவரை தாக்கி பைக்கை பறித்தும், பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பித்து செல்ல பாலத்திலிருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News May 27, 2024

பைக் மோதியதில் குழந்தை பலி

image

காரிமங்கலம் அருகே காமலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்-காவியா தம்பதியினர். இவர்களது 2 வயது குழந்தை ஆதவன், நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்த நிலையில், மேல் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

News May 27, 2024

நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

சேலம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குவிந்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அருவியில் தண்ணீர் வரத்து பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!