Tamilnadu

News May 28, 2024

திருப்பத்தூர்: 25% கட்டாய கல்வி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் யுகேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை 25% கட்டாய கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் இன்று காலை 10 மணி அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் பள்ளி நிர்வாகத்தின் முன்னிலையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News May 28, 2024

இந்திய விமானப்படையின் அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு

image

இந்திய விமானப் படையின் அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கு இணைய வழியில் கடந்த 22 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 5 வரை ஆகும். 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த, திருமணமாகாத, இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார் https://agnipathivayu.cdac.in/ இதில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

News May 28, 2024

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு அதிகாலை 4.10 மணிக்கு செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 2,9,16,23,30 தேதி இந்த ரயில் இயங்கும். இதே போல மறு மார்க்கத்தில் 3, 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதியில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News May 28, 2024

டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரிக்கை

image

கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் கடை கடந்த 9 வருடங்களாக இயங்கி வந்த நிலையில், இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுமாறு மனு அளித்தனர். மனு அளித்து 2 வருடம் ஆகியும் கடை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், நேற்று அரசு மதுபான கடைக்கு மது பாட்டில் இறக்க வந்த லாரியை இறக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் சமாதானம் பேசினார்.

News May 28, 2024

சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை-விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையை விரிவுபடுத்தும் நோக்கில் சாலையோர புளிய மரங்கள் அகற்றப்பட்டு பக்க கால் வாய்க்கால் அமைக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையோரம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 28, 2024

தென்காசி அருகே இரவு தொடர் மின்தடை

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் மதினாநகர், கிரசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியத்திலிருந்து மின் தடை அடிக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அங்கு சில வீடுகளில் தொடர்ந்து மின்தடை உள்ளது. இது குறித்து மின்வாரிய நிர்வாகி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை இல்லை. இதனால் இரவு வரை இந்தப் பகுதி மக்களுக்கு சிரமம் நீடித்தது. இவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.

News May 28, 2024

திண்டுக்கல்: நிவாரணம் வழங்க கோரி மனு

image

திண்டுக்கல் பகுதிகளில் தொடா் மழையால் நெல், மக்காச்சோளப் பயிா் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடுடன் , நிவாரணமும் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி, தலைவா் பெருமாள் ஆகியோா் பங்கேற்றனர்

News May 28, 2024

திருச்சி:அதிகரிக்கும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிர படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் இல்லம் தேடி கல்வி திட்டமும் முழு முயற்சியில் நடைபெற்று வருகிறது.எனவே இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு பள்ளிகளை காப்போம் அறிவார்ந்த சமூகத்தை அமைப்போம் என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

குதிரை வாகன பெருமாளுக்கு பரிவட்டம் விழா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் டி.கே.நம்பி தெருவில் உள்ள ஸ்ரீதிருமலை ஆழ்வார் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் வந்த பெருமாளுக்கு பூரண கும்ப பரிவட்டம் விழா நடைபெற்றது. இதில் மண்டபத்தில் அருளிய பெருமாளுக்கு ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் தரிசனம் செய்து பரிவர்த்தத்தை கண்டு களித்தார்கள். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். 

News May 28, 2024

விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

அரசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட இருந்தை கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூர், பழைய பட்டினம், கிராமம், பொய்கை அரசூர், ஆணைவாரி ஆகிய கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!