India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்று (மார்ச் 23) மாலை அறிவிக்கப்பட்ட ஜான்சி ராணி திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் நெல்லைப் புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும் உள்ளார். இவர் பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் திசையன்விளையில் வசிக்கிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது 5 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி உள்ளிட்ட 25 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அவரை போலீசார் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் பிடித்து கைது செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் கீதா பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் படி மணிகண்டன் இன்று (மார்ச் 23) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்ட மேடையின் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சிறப்பு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க ஏற்கனவே தேர்தல் தொடர்பு கட்டுப்பாட்டு மைய எண்களான 1950, 0452-234600 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் C-VIGIL என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திடம் காவல்துறை
உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளன. எனவே தேர்தலின் போது அவர் துறைசார்ந்த அரசு இயந்திரம் அவருக்கு ஆதரவாக செயல்படக் கூடிய சூழல் உருவாகும். ஆகவே உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டது உயர் பண்பு என்ற போதிலும், அவரது மரபு மீறல்கள் தமிழகத்தை அவமானப் படுத்துகிறது. என திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதையே சாதகமாக வைத்துக்கொண்டு ஒருவர் தொடர்ந்து தவறுகள் செய்வது ஏற்கத்தக்கதல்ல எனவும், இனிமேலாவது சரியான நபரை ஆளுநராக பாஜக தேர்ந்தெடுக்க கூறியுள்ளார்.
சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார். அதில்
டி.எம்.செல்வகணபதி யார் என்று உங்களுக்கு தெரியும். கட்சி மாறியதால் தான் அவர் அனுபவசாலி. அ.தி.மு.க.வால் தான் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதவிகள் கிடைத்தன; சேலம் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மகளிர் திட்ட இயக்குனர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுகை நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ஆட்சியர் மெர்சி ரம்யாவை ஆட்சியரகத்தில் சந்தித்த ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை செல்ல தங்கையா ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைப்படி ஏழு மணி முதல் 10 மணி வரை நாட்டுப்புற நிகழ்ச்சி நடைபெறவும் காவல்துறை அனுமதி அளிக்கவும் கோரிக்கை மனு அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தும் 181 பேர், இன்று போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.