India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் அருகே வீனஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் இளைய பாரத் மற்றும் கபிலன் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டையாகும். இது திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டது. 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இக்கோட்டையினுள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கேபிள் நிறுவனம் அனுமதி பெற்ற 144 இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களிலேயே பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு வேனில் இன்று (மே 28) ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாளை பொன்னாக்குடி பகுதி அருகே எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் காரில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதம், 15 நாள் கடைகள் மூட வேண்டும். இரண்டாவது முறை ரூ.50,000 அபராதம், 30 நாள் கடை மூட வேண்டும். மூன்றாவது முறை விற்பனை செய்தால் 90 நாள் கடை மூடுவதுடன் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் அதிக நீர் தேங்காமல் உரிய வடிகால் வசதி செய்து, நீர்ப்பாசனம், உரமிடுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி காண முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் இன்று சிறப்பு ஒதுக்கீடு பிரிவினர்களுக்கான விளையாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் இன்று நடைபெற்றது அது மட்டும் இன்றி வரும் பத்தாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டிஎன்பிசி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுக வேண்டும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (50). அரசு பஸ் கண்டக்டர். இவர் இன்று மதியம் கலவை டவுன் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தருவதற்காக வரும்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கடலூரில் இன்று வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. வெயிலில் இருந்து சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் பழங்கள் மற்றும் ஜூஸ்களை குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையோரம் தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை இன்று விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.