Tamilnadu

News March 23, 2024

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

News March 23, 2024

தி.மலை: 12 D படிவத்தினை வழங்கிய ஆட்சியர்

image

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பேருந்து நிலையம் அருகே, அன்னை அஞ்சுகம் நகரில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக நேரில் சென்று 12-D படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News March 23, 2024

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

image

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில் தேர்தல் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆட்சியர் கலந்துகொண்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.

News March 23, 2024

தேனி:  அதிமுக ஆலோசனை கூட்டம் 

image

தேனி மக்களவை தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஜக்கையன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்தனர். இந்த நிகழ்வில் அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் பலர் பங்கேற்றனர்

News March 23, 2024

அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம்

image

அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று டைட்டன் நிறுவனத்தால் படித்துக்கொண்டே ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் அரசுப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள், அதற்கான நியமன ஆணையை டைட்டன் கம்பெனியின் மனிதவள நிர்வாகி(HR) .ராஜ்குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார்

News March 23, 2024

தூத்துக்குடி: நாளை மின் தடை

image

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நாளை (24.03.24) காலை 7.30 மணி முதல் தேரோட்டம் முடியும் வரை தெற்கு மாசி தெரு, மேல மாசி தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி ஆகிய பகுதிகளிலும், தேர் உயர் மின்பாதை அருகில் வரும் போது ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 23, 2024

வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (மார்ச் 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி சசிகலா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பும், திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இக்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் முன்னாள் மேல் சபை எம்பியுமான அசோக் சித்தார்த் கலந்துகொண்டு பட்டியலை வெளியிட்டு திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் மகிழ்மதியை அறிமுகம் செய்தனர்.

News March 23, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற பகுதிகளில் இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News March 23, 2024

கோவையின் வெப்பநிலை நிலவரம் அறிவிப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி கோவையில், 23-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 24 டிகிரியில் இருந்து அதிகபட்சம் 37 வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் வெப்பம் பதிவாவதில் சென்னையை மிஞ்சியுள்ளது கோவை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!