Tamilnadu

News March 23, 2024

திண்டுக்கல்: எஸ்டிபிஐ வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

News March 23, 2024

சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.03.2024)   ஆஷா அஜித்,  மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

திண்டுக்கல்: பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் NDA கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள், பாமக வேட்பாளர் திலக பாமா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், பாஜக மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தனர்.

News March 23, 2024

பழனி அடிவாரம் பகுதியில் தீ விபத்து

image

பழனிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 32 ஆவது வார்டு கவுன்சிலர் தீனதயாளன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது . இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

News March 23, 2024

மாற்றுத்திறனாளிக்கு 12 படிவம் வழங்கல்

image

வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று 12-னு படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

News March 23, 2024

 மாவட்ட அளவிலான கபடி போட்டி

image

தேனி மாவட்டம்
போடிநாயக்கனூரில்
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் போடி தேனி மாவட்ட அமைச்சியூர் கபடி கழகம் இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியர் சங்கிலிக்காலை ஜே. ஜே.செல்வின், ரிச்சர்ட் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

தூத்துக்குடி: தமாகா வேட்பாளர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 23, 2024

ஒட்டன்சத்திரம் வந்த நாமக்கல் பக்தர்கள்

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை வருவர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு இன்று வந்தடைந்தனர்.

News March 23, 2024

நாட்றம்பள்ளி: தீவிர கண்காணிப்பு

image

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலைமேல் உள்ள சென்றாய சாமி ஆலயத்தின் உற்சவ விழாவின் 5 ஆம் நாளான இன்று சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

error: Content is protected !!