India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம்: காங்கேயம் முத்தூர் சாலையில் வாகனத்தில் கோயிலுக்கு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பெண் ஒருவர் பலி அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கணவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை காங்கேயம் முத்துர் சாலை சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு – சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை – ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக சேர்க்க கோரி மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <
சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர். <
சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
புதுவை, பாகூரில் உள்ள 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில், பக்தர்களின் வசதிக்காக இ-உண்டியல் சேவையை நேற்று (ஆக.22) எம்.எல்.ஏ செந்தில்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர், மார்க்கெட்டிங் மேலாளர், பாகூர் கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் பாகூர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தக்கலை அண்ணா நகரை சேர்ந்தவர் வைகுந்த் (28) ராணுவ வீரர். முத்தலக்குறிச்சியில் புதிய வீடு கட்டி நவம்பர் மாதம் திருமணம் செய்து வீட்டில் குடிபுக முடிவு செய்திருந்தார். ஆக19 ம் தேதி அசாம் மணிப்பூரில் தங்கியிருந்த கூடாரம் வழியாக மின்சாரம் வைகுந்தை தாக்கியது. ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார். 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவர் உடல் நேற்று தகனம் செய்ப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நள்ளிரவு முதல் வெளுத்தெடுத்த கனமழையினால், சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் ஒரு அடிக்கு மேலாகத் தேங்கிய மழைநீர் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பயணம் மேற்கொள்ளும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவும்.
Sorry, no posts matched your criteria.