India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வே. மணிவாசகனை (தலைமை ஆசிரியர் ஓய்வு) அக்கட்சியின் தலைவர் சீமான் நியமனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், மணி ஆகிய இருவரும் நேற்று சாலையில் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே மதுபோதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் ரத்தகாயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டவர். மிகவும் துடிப்பாக செயல்படக்கூடியவர் என்ற நற்பெயர் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கரூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தொடர்ந்து 2வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை எதிர்த்து ஜோதிமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில், பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், பாஜக சார்பில், ராதிகாவும் போட்டியிடுகின்றனர்.
பழனியில் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். நாளை பங்குனி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேரோட்ட நிகழ்வை காண 4 இடங்களில் எல்.ஈடி.திரை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.