Tamilnadu

News March 24, 2024

திருச்சி:இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

image

திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டம் குறித்து திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக எனும் தீய சக்தியை வேரோடு பெயர்த்து எறிவதற்காக களப்பணியை திருச்சி மண்ணிலிருந்து போர் முரசு கொட்டி தொடங்கியிருக்கிறது. எனவே வெற்றி பெற்று இந்தியா கூட்டணி தலைமையிலான அரசுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் என்றார்.

News March 24, 2024

புதுவையில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

image

புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழ் வேந்தன் நேற்று உழவர்கரை தொகுதி சமூக சேவகரும் வழக்கறிஞரும் ஆன சசிபாலனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

News March 24, 2024

நாட்றம்பள்ளியில் பறக்கும் படை அதிரடி

image

நாட்றம்பள்ளியில் 23.03.2024 நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆவணம் இன்றி ரூபாய் 1, 62, 800 பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

News March 24, 2024

செஞ்சி அருகே சித்த மருத்துவர் விபத்தில் பலி

image

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சசிகுமார், மனைவி சித்ரா. செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரியும் சித்ரா நேற்று (மார்ச் 23) பணியை முடித்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தகரம் அருகே எதிரே வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார். இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2024

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆண்டு விழா

image

கன்னியாகுமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பீட்டர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். இயக்குனர் டேவிட் பிலிப் டேனியல் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆர்.டேனியல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

News March 24, 2024

புதுக்கோட்டை:மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

image

புதுக்கோட்டை ismart பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி , வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரசாரம்

image

உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பு, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News March 24, 2024

மகளிர் கல்லூரியில் பெரியார் வைக்கம் போர் வீரர் நிகழ்ச்சி

image

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும், சமவாய்ப்பு மன்றமும் இணைந்து ‘பெரியார் – வைக்கம் போர் வீரர்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை க.பாரதி கலந்து கொண்டு மாணவியரிடையே உரையாற்றினர்.

News March 24, 2024

மயிலாடுதுறை:ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 24, 2024

தருமபுரி அருகே பங்குனி உத்திர திருவிழா!!

image

அன்னசாகரம் கிராமத்தில் பங்குனி உத்திரம் திருவிழா புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 8 மணியளவில் பங்குனி உத்திர திருவிழா விழா கோலாகலம் நடைபெற்றது. விழாவில் வள்ளி முருகப் பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!