India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அப்போலோ மருத்துவமனை குழுவினர் 51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். கல்லீரல் மாற்று சிகிச்சை செயல் திட்டத் தலைவர் டாக்டர் இளங்குமரன் கூறியது, ” 2015 முதல் தற்போது வரை சிறியவர்கள், பெரியவர்கள் உட்பட 51 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து, அப்போலோ மருத்துவமனை தனது நிபுணத்துவத்தை நிலைநாட்டியுள்ளது” என்று கூறினார்.
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் அந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இரு முறை ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுர்க்கத்தில் அமைந்துள்ளது இந்த தியாகதுர்க்கம் மலைக்குன்று. இம்மலையில் குகைகள், சுனைநீர் கிணறு உள்ளது. இதன்மேல் ஒரு கோட்டையும் அமைந்துள்ளது. இது கி.பி 1760 முதல் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டே ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பின் திப்பு சுல்தான் இதை மீட்க போர் புரிந்தார். பின் ஆங்கிலேய ஆட்சி நிலையானதும் இக்கோட்டைராணுவத் தளங்களாகச் செயல்பட்டது.
2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிக்கல்வி பயின்று, 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பு சேரும் அனைத்து மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற்று பயனடையலாம். இத்திட்டத்துக்கு தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி திட்டம் சென்னை மாநகரில் 2021 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விருதுநகர் மாவட்ட போலீசார் பயன்பெறும் வகையில் தென் மண்டல ஐஜி உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நேற்று பயிற்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆண்டுக்கான இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் துவக்கி வைத்தார். இதில், கல்லூரியில் பணிபுரியும் பல நிலை அலுவலக மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று தகுதி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்று சான்றிதழ்களை பரிசீலனை செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டீ கடையில் நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார் என்பவர் இன்று(மே 30) டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது கடையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பெண் கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியுள்ளார். காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒடுகத்தூரில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் 11 மணிக்கு கோவிலை அடைந்தது. அங்கு ஊஞ்சலில் அம்மன் சிரசு வைத்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடந்து கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மன் சிலை மீது சிரசு பொருத்தப்பட்டது. இதில், ஒடுகத்தூரை சுற்றியுள்ள பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் வழுக்கம் பாறையை சேர்ந்தவர் இருதயராஜ்(57). குலசேகரபுரம் பஞ்சாயத்து கவுன்சிலரான இவர் நேற்று(மே 29) நல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது புத்தன் துறை அருண்குமார்(21), கோட்டார் ஜெரின் (24), நன்றிகுழி அஜித் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மது குடிக்க ரூ.500 பறித்து சென்றனர். இது குறித்த புகாரில் சுசீந்திரம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.