Tamilnadu

News May 31, 2024

கரூர்: இன்று மின்சாரம் இல்லை

image

புகழூர் துணை மின் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நாணப்பரப்பு, புகழூர் செம்படாபாளையம் , தோட்டக்குறிச்சி, வீரராஜபுரம் , தர்மராஜபுரம், செந்தூர் நகர்,   மூணூட்டுப்பாளையம் , மலையம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

News May 31, 2024

நாமக்கல்: தீயணைப்பு செயல் விளக்கம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக் குட்பட்ட மாணிக்கம் மருத்துவமனை ராசிபுரத்தில் மருத்துவர்கள் விஜயகுமார் கோகிலவாணி ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீ பாதுகாப்பு தீயின் வகைகள் என்னென்ன தீயின் தன்மை கேற்ப தீயை எவ்வாறு எளிய முறையில்
அணைக்கவேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

News May 31, 2024

நள்ளிரவில் திருடிச் சென்ற பைக் சுற்றி வளைப்பு

image

இராஜதானியை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். நேற்று அதிகாலையில் அவரது டூவீலரை கணேசபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் தள்ளிக் கொண்டு போவதாக கிடைத்த தகவலின் பேரில் நடராஜன் ஆட்களுடன் சென்று அவரை சுத்தி வளைத்தார் . முத்துப்பாண்டி டூவீலரை போட்டு தப்பினார். புகாரின் பேரில் இராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 31, 2024

துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுமி பலி!

image

உசிலம்பட்டி, விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் ரவிராஜன் மகள் சசிகா(10). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மே 30) இச்சிறுமி துப்பட்டாவை, சாய்த்து வைத்திருந்த கட்டிலில் கட்டி விளையாடிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கழுத்தில் துப்பட்டா சுற்றி இறுக்கவே,  மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனை கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

தென்காசியில் டெய்லரிடம் ஆன்லைனில் ரூ 5000 மோசடி

image

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குறி வைத்து செல்போனை தொடர்பு கொண்டு கியூ ஆர் கோடு அனுப்புகிறோம். அதில் ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என கூறி மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மேலகரம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் செல்வம் என்பவரது எண்ணுக்கும் நேற்று அழைப்பு வந்து 5 ஆயிரத்து இழந்துள்ளார். இது குறித்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி தேதி அறிவிப்பு

image

மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட கருத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 தேதியும்,
4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024 தேதியில் நடைபெற உள்ளது.

News May 31, 2024

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு

image

சிவகங்கை மாவட்டநிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பணிசெய்து போது பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி தகவல் பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது

News May 31, 2024

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லுாரி வளாகத்தில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் எம்.ஏ.எம்.எஸ்சி. எம்.காம். உள்ளிட்ட 16 முதுநிலை பட்டப் படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று 31ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

News May 31, 2024

புதுவையில் மீண்டும் விமான சேவை

image

இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி விமான அதிகாரிகள் இடையே காணொலி மூலம் நேற்று நடத்திய கூட்டத்தில், புதுச்சேரி விமான சேவையை அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கி கொள்வதாகவும், புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் இரண்டு அலுவலக அறை மற்றும் விமான பராமரிப்பதற்கான பணிமணைக்கான இடம் ஆகியவை வேண்டும் என இண்டிகோ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

News May 31, 2024

எட்டுக்குடி கோவில் கலசங்களில் தங்கமுலாம்: கோயில் மறுப்பு

image

எட்டுக்குடி முருகன் கோயில் கோபுரத்திலுள்ள கலசங்களுக்கு சுமார் 1000 கிராம் அளவிற்கு தங்க முலாம் பூசப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள 8 கோபுரங்களுக்கு 8 கிராம் வீதம் 64 கிராம் மட்டுமே தங்கம் மூலம் பூசப்பட்டதாகவும் , வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் கோயில் செயல் அலுவலர் கவியரசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!