Tamilnadu

News May 31, 2024

திருப்பூர்: கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு திறமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த பரத் குமார்(21), முகேஷ் குமார்(34) மற்றும் சுப்பையா(46) என்பதும், கஞ்சா சாக்லேட் விற்றதும் தெரிய வர அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News May 31, 2024

ஊட்டி மலை ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

image

ஊட்டியிலிருந்து நேற்று(மே 30) குன்னூர் நோக்கி சென்ற மலை ரயில், ‘பர்ன் ஹில்’ பகுதியில் சென்றபோது இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த எஞ்சின் டிரைவர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், எஸ்ஐ ராமன் ஆய்வில் இறங்கினார். அதில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இளைஞர் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

பேரணாம்பட்டு: ஆட்டை கடித்துக் குதறிய சிறுத்தை

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரிய தாமல்செருவு கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி சிவன் கோயில் உள்ளது. இங்கு சரவணன் என்பவர் தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு(மே 30) இவரது கொட்டகையில் திடீரென புகுந்த சிறுத்தை அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்துக் குதறியது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

News May 31, 2024

விக்கிரவாண்டி அருகே 3 கார்கள் மோதி விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நேற்று(மே 30) வேகமாக வந்த கார், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த 2 கார்களும் மோதி சாலையின் குறுக்கே நின்றது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 31, 2024

ஓசூர் அருகே லாரிகள் மோதி விபத்து!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று(மே 30) மாலை சுமார் 4 மணியளவில் காய்கறிகள் ஏற்றி வந்த லாரி நிலைத்தடுமாறி அருகே சென்ற லாரியில் மோதியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில், லாரிகளின் ஓட்டுநர்கள் தலைமறைவான சம்பவம் சந்தேகம்படும்படி உள்ளதாக சம்பவ இடத்தில் ஓசூர் அட்கோ போலீசார் ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 31, 2024

போட்டி தேர்வுகள் இலவச பயிற்சி வகுப்பு

image

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை (மே.31) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.இதில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்க அழைப்பு 

image

ஈரோடு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் பெயர் பதிவு செய்யாமல் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ரூ.200 கால தாமத கட்டணம் செலுத்தி ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதில்  விண்ணப்பித்தவர்களுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

இன்று இப்பகுதியில் மின்தடை

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (மே.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேன்மொழி நகர், முத்தரையர் நகர், பாளையம்பட்டி கிழக்கு மற்றும் பஜார் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 31, 2024

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

image

ஆத்தூர், ஜே.புதுக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் சாதிக், ஜோதிமணி, முருகன் ஆகியோா் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தனா். அப்போது திண்டுக்கல்லைச் சோ்ந்த பாண்டியராஜன் என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 31, 2024

நெல்லையில் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடபட்டிருக்கும் என நேற்று(மே 30) மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!