Tamilnadu

News May 31, 2024

தர்மபுரி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

ஈரோடு: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

ஈரோடு மாணவர்களே ! இன்றே கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகள் 2024-25ஆம் ஆண்டுக்கான முதுநிலை பி.எச்.டி., மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளிநாடுகளில் தொடர விண்ணப்பிக்கலாம். இதற்கு https://overseas.tribal.gov.in என்ற இணைய வழியில் இன்று மாலைக்குள் (மே 31) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://overseas.tribal.gov.in இணையதளத்தில் அறியலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

News May 31, 2024

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற ரவுடி கைது

image

கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கூடுவாஞ்சேரி தேரடி மேட்டு தெருவைச் சேர்ந்த ரவுடி அப்பளம் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News May 31, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, இன்று வெள்ளிக்கிழமை (31.5.2024) பரமத்தி வேலூர், வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கபிலர்மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். இந்த, ஆய்வின் போது சம்பந்தப்பட்ட , மருத்துவ துறை அதிகாரிகள், பலர் உடன் இருந்தனர்.

News May 31, 2024

வேலூர் தொல்லியல்துறை அருங்காட்சியகம் சிறப்பு!

image

இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியகம், வேலூர் கோட்டையின் பாதுஷா மற்றும் பேகம் மகாலில் இயங்கி வருகிறது. பல்லவ விஜயநகர ஆட்சியின் கீழ் இருந்த, வேலூர் மாவட்டத்தில் கிடைத்த கற்சிலைகள், வீரக்கற்கள் மற்றும் வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது 1985-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

News May 31, 2024

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியில் இன்று டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் புகைப்பிடித்ததால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இதனால் பல்வேறு நோய் தோற்று ஏற்படுதல் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News May 31, 2024

நீதிமன்ற வளாகத்தில் பிடிபட்ட 5 அடி நீள பாம்பு

image

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

News May 31, 2024

அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்

image

இன்று (மே 31) பிறந்தநாள் காணும் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் செஞ்சியில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் மாவட்டச் செயலாளர்கள் மலைச்சாமி, பொன்னிவளவன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News May 31, 2024

பைக்காரா நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

image

உதகை, நடுவட்டம் அருகே பைக்காரா உள்ளது. அங்குள்ள படகு இல்லம் சாலை பராமரிப்பு பணிகளுக்கு மூடப்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று தாழ்வான பாறைகளின் வழியாக செல்லும் நீர் வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுவதை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதியில் ஷெல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

error: Content is protected !!