Tamilnadu

News March 26, 2024

விருதுநகர் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர் உள்ளிட்ட 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியுடைய விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 26, 2024

பென்னாகரம் அருகே தேர் திருவிழா

image

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் திப்பட்டி கிராமத்தில் பழைமை வாய்ந்த திரௌபதியம்மன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கொடியேற்றம், இரண்டாம் நாள் தீமிதி விழாவை தொடர்ந்து நேற்று  (மார்ச் 25) மாலை 6 மணிக்கு 3ம் நாள் திரௌபதி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

News March 26, 2024

தஞ்சாவூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

image

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹுமாயூன் அவர்களை ஆதரித்து இன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது பந்தலடி ,கீழப்பாலம் ,தேரடி ஆகிய இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதிசெல்வன் தலைமையில் அக் கட்சியினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்

News March 26, 2024

சிவகங்கை: தாய்த்தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல்

image

சிவகங்கையில் தாய்த்தமிழர் கட்சியின் சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் சிவகங்கை மாவட்ட செயலாளர், க.மலைச்சாமி அவர்கள் சிவகங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் தாய்த்தமிழர் கட்சியின் தலைவர் பி.ம.பாண்டியன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தாய்தமிழர் ஊடக பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News March 26, 2024

கரூரில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் அதிமுக வேட்பாளர்

image

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் பாகநத்தம், கொடையூர் வெடிக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

News March 26, 2024

ஈரோடு மாவட்டத்தில் இன்று 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச்.26) துவங்கி, ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 26, 2024

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் செங்கல்பட்டில் மனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரபாகரன் நேற்று (மார்ச்-25) (ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 26, 2024

புதுகை: 22,835 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 22,835 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தமிழ் பாடத் தேர்வுடன் தொடங்கி வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கண்காணிப்பு அலுவலராக மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News March 26, 2024

வேலூர்: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்

image

வேலூர் மாவட்டம், காட்பாடி டவுன் பகுதியில் நடைபெற்ற அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில்தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டம் கொண்டு வந்தவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்திவரும் நம்முடைய முதலமைச்சர் என்றார்.

News March 26, 2024

நாமக்கல்: விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்

image

மக்களவை 2024 தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி
வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோடு வேட்பாளராக அல்லது தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தகவல் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!