Tamilnadu

News March 26, 2024

சென்னை vs குஜராத் : மெட்ரோ சேவை நீட்டிப்பு

image

17வது ஐபிஎல் தொடரில், சென்னை – குஜராத் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை காண சென்னை மாநகர பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை காண்பித்து ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும், போட்டி முடிந்து வீடு திரும்ப ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் இன்று நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

சேலம்: கட்டுக்கடங்காத காட்டுத் தீ

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள கோவிலூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீயானது கடந்த 3 நாட்களாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது.
வனத்துறையினர் கடுமையாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த காட்டுத் தீயினால் பல நூறு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. அங்குள்ள அரிய வகை மூலிகைகளும், பல வகையான விலங்குகளும் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன .

News March 26, 2024

தஞ்சாவூர் அருகே செவிலியர் தற்கொலை 

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அபிநயா(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அபிநயாவை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிநயா நேற்று(மார்ச் 25) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரரித்து வருகின்றனர்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 24) வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.

News March 26, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை தேர்தல் குறித்த நேற்று(மார்ச் 25) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், அரக்கோணம் மக்களவை தேர்தலில் பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

News March 26, 2024

அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு

image

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை மேலும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (மார்ச் 26) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

News March 26, 2024

பெரம்பலூரில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 8,000 பேர்!

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 26) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 43 மையங்களில், 144 பள்ளிகளை சேர்ந்த 4,375 மாணவர்களும், 3,626 மாணவிகளும் என மொத்தம் 8,001 பேர் தேர்வு எழுத உள்ளனர், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எந்தவித பதட்டமும் அச்சமும் இன்றி தேர்வை எழுத வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுரை வழங்கியுள்ளார்.

News March 26, 2024

நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரபலம்

image

பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஹரி நாடார் இன்று (மார்ச் 26) காலை நெல்லைக்கு வருகை தருகின்றார். அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கராத்தே செல்வின் நாடார் நினைவு இடத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.

News March 26, 2024

திருவள்ளூர்: அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

திருத்தணியில் நேற்று இரவு அரக்கோணம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் குறித்த வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார் திருத்தணியின் முன்னாள் எம்பி ஹரி. மேலும் இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ரமணா, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News March 26, 2024

கள்ளக்குறிச்சி: மாரியம்மன் கோவில் தேரோட்டம்

image

திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரை தாழனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

error: Content is protected !!