India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் நிஷா பவுண்டேசன் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் கந்தர் ராசிக் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிஷா பவுண்டேசன் கெளரவ ஆலோசகரும், முன்னாள் காவல் துறை சார்பு ஆய்வாளருமான சீனிமுஹம்மது பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக புதுகை வட்டாட்சியர் அலுவலக வைப்பறையில் நேற்று பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில்
பார்வையிட்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகாமில் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டிணம் அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியில் எழுந்தருளியுள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ஆலயத்தில் நேற்று (ஜூன் 6) மாலை 7 மணி அளவில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு துவங்கியது. இந்த வழிபாடு அதிகாலை ஒரு மணி வரை நடைபெற்றது. மேலும் ஒரு மணி அளவில் பூங்காவனத்தம்மன் திருவீதிவுலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் குவிந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் உயர் தொழில் நுட்ப ஆய்வகம், மாணவர்கள் வருகை பதிவேற்றம் (இஎம்ஐஎஸ் ) ஆகிய பணிகளுக்காக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கணினி வழித் தேர்வு இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் ஏழு மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
சிதம்பரம் தாலுகா போலீசார் பாலூத்தாங்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே மேற்கு காடு பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் 53 மது போதைக்கு அடிமையானார் நேற்று மாலை மது போதையில் கீழே விழுந்தவர் மயங்கி கிடந்தார் அவரை மீட்டு அவரது மனைவி மீனா அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கூட்டி சென்றார் மருத்துவர்கள் பரிசோதித்ததில் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில்
வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் மே 2024ம் ஆண்டு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் முதல் வாரத்தில் நியாயவிலைக்கடையில் பெற்றுக் கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. அதி மழை காரணமாக போடி பார்க் நிறுத்தம் அருகே மழை நீரானது சாக்கடை கழிவு நீரில் கலந்து சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.