India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் பகுதி வசிக்கும் அப்பாதுரை மகன் இளங்கோ(41). இவர் நேற்று(ஜூன் 6) இரவு வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றபோது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இளங்கோவை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றநிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீர் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் செல்வதாக, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அரக்கோணம், பனப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று(ஜூன் 6) மாலை முதல் இன்று காலை 6 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 110.5 மி.மீட்டர் மழை பதிவானது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 293 மில்லி மீட்டர் மழை பெய்து, இரவில் குளிர்ந்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு மே மாதத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும்போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் நேற்று(ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 220 கால்நடைகள் இருப்பு பாதையை கடந்து செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல் ரயில் பாதையைக் கடந்த 262 பேரில், 230 பேர் உயிரிழந்துள்ளதாக கோட்டமேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இருப்பாதை வழிதடத்தில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பழனி பகுதி பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாறு-பொருந்தலாறு அணையில் நீர் இருப்பு நேற்று ( 65 அடி) 38 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 31கன அடி நீர்வரத்து இருந்தது. இதை தொடர்ந்து அக். 10 வரை 120 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் இரண்டாம் போக பாசனத்திற்கு 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10, 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மோனிஷா என்ற பெண் வரைந்த மீனாட்சி அம்மன் ஓவியத்தை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. ஓவியத்தில் சாதித்த இளம்பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மீனாட்சியம்மனின் தத்துருவ ஓவியத்தை சுமார் 35 மணி நேரத்தில் வரைந்து இச்சாதனையை படைத்துள்ளார். மேலும் இவர் ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பங்கை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார்.
விழுப்புரம் ஆட்சியர் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024 மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் அருகில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு கருப்பசாமியை தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.